காலா திரைப்படத்தில் ரஜினி காந்த் மஹேந்திரா தார் காரில் உட்காந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு தார் கார் காலாவில் பயன்படுத்தபடுவதை கண்டு பெருமிதப்படுவதாக டுவிட் செய்துள்ளார்.
unknown nodeநடிகர் ரஜினியின் நடிப்பில் காலா திரைப்படம் நிரைவடைந்து ரிலீஸிற்கு தயாராக இருக்கிறது. வரும் ஜூன் மாதம் வெளியீடு என அதன் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த படத்தின் சில போஸ்டர்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன.
அதில்ரஜினி காந்த் மஹேந்திரா தார் வாகனத்தில் உட்காந்திருப்பது போன்ற படம் வெளியானது. தற்போது இப்படத்திற்கான பாடல்கள் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் அதை விளம்பரப்படுத்த தார் வாகனத்தில் ரஜினிகாந்த் உட்காந்திருக்கும் படத்தை பேப்பர்களில் விளம்பரமாக வெளியிட்டது. இந்த அந்த பேப்பர் விளம்பரத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மஹேந்திரா &மஹேந்திர நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆனந்த் மஹேந்திரா காலையில் எழுந்தவுடன் பேப்பரின் முதல் பக்கத்தில் இதை பார்த்ததில் மகிழ்ச்சி எனவும், தார் காரை பயன்படுத்தி அதை கவுரவித்திருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
unknown nodeஇப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் முன்னர் ஒரு முறை கூறும்போது இந்த தார் கார் மஹேந்திரா நிறுவனத்திடம் வாங்கப்பட்டது.ஷூட்டிங் முடிந்ததும் மீண்டும் மஹேந்திரா நிறுவனத்திடமே ஒப்படைக்கப்படும் என கூறியிருந்தா். ம
unknown nodeதாரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரின் விலை ரூ 6.27 லட்சத்தில் இருந்து ரூ 9 லட்சம் வரை விற்பனைக்கு வருகிறது.