தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் கனமழை பெய்துள்ளது. சேலத்தில் இடிமின்னலுடன் மாலை நேரத்தில் பெய்த மழையால், வெயிலின் தாக்கத்தால் நிலவிய வெப்பம் பெருமளவு தணிந்தது.
இதேபோல், ஏற்காட்டிலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுக்கும் அளவுக்கு பிற்பகலில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை நீடித்தது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கனமழை பெய்தது. இதனால் மண்ணில் ஈரப்பதம் ஏற்பட்டு, குளிர்ந்த காற்று வீசியது.