பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக, சந்தானம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிட்டி செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது.
இதுதொடர்பாக செல்வகோமதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நிர்மலாதேவி குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்கும் குழு தான் விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது