ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு பகல் கனவு காண்பதாகவும், 2024-ஆம் ஆண்டு வரை பிரதமர் பதவி காலியாக இல்லை என்றும் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் தெரிவித்துள்ளார் கர்நாடக மாநிலம் பிடாரில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், 2019 மக்களவைத் தேர்தலிலும் நரேந்திரமோடியையே பிரதமராக தேர்ந்தெடுக்க மக்கள் தயாராகி வருவதாகவும், எனவே 2024-ஆம் ஆண்டு வரை பிரதமர் பதவி காலியாக இல்லை என்றும் கூறினார்.
ராகுல் காந்தி துணை தலைவராக பதவியேற்ற பின் காங்கிரஸ் கட்சி 13 மாநிலங்களையும் தலைவராகப் பதவியேற்ற பின் 5 மாநிலங்களையும் இழந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், கர்நாடகாவிலும் காங்கிரஸ் தோற்றால் அது 6-ஆகி விடும் என்றார்.