விபத்து நேரிட்ட இடத்துக்குச் சென்ற போலீஸ் அதிகாரிகள் செல்ஃபி எடுத்து சர்ச்சை கிளப்பினர்..!

உத்தரப்பிரதேசத்தில் விபத்து நேரிட்ட இடத்துக்குச் சென்ற போலீஸ் அதிகாரிகள், அதன் பின்னணியில் செல்ஃபி எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ நகரில்

உத்தரப்பிரதேசத்தில் விபத்து நேரிட்ட இடத்துக்குச் சென்ற போலீஸ் அதிகாரிகள், அதன் பின்னணியில் செல்ஃபி எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ நகரில் டல்கட்டோரா (Talkatora)என்ற இடத்தில் சிமெண்ட் குடோன் ஒன்றில் மூடைகள் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலியாகினர்.

இதுகுறித்து தகவலறிந்த அந்தப் பகுதி காவல்நிலைய ஆய்வாளர் சுஜித் உபாத்யாய் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஆய்வு நடத்தி, விசாரணை மேற்கொண்டனர். மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன.

அப்போது, காவல் ஆய்வாளர் சுஜித், வெகு இயல்பாக அங்கிருந்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். 2 தொழிலாளர்கள் பலியான அந்த சோகமான சூழலில், அதிகாரி ஒருவர் பொறுப்பின்றி செல்ஃபி எடுத்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

விபத்து நேரிட்ட இடத்துக்குச் சென்ற போலீஸ் அதிகாரிகள் செல்ஃபி எடுத்து சர்ச்சை கிளப்பினர்..!