சர்ச்சையை கிளப்பிய பிரதமர்..!

கனடாவின் கியூபெக்கில் உள்ள அலுமினிய ஆலைக்கு நிதியுதவி அளிப்பதாகப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்த சில நாட்களிலேயே அங்குள்ள தொகுதிக்கு இடைத் தேர்தல்

கனடாவின் கியூபெக்கில் உள்ள அலுமினிய ஆலைக்கு நிதியுதவி அளிப்பதாகப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்த சில நாட்களிலேயே அங்குள்ள தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கியூபெக் மாவட்டத்தில் அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்குள்ள அலுமினிய உருக்குத் தொழிற்சாலைக்கு இந்திய மதிப்பில் மூவாயிரத்து 755 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் இங்குள்ள சிகோடிமி லி ஜார்டு தொகுதிக்கு ஜூன் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியின் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் லெமியக்ஸ் சொந்தக் காரணங்களால் கடந்த ஆண்டு பதவி விலகினார். தேர்தலை முன்னிட்டு அலுமினிய ஆலைக்கு நிதியுதவி அறிவித்துள்ளது அரசியல் உள்நோக்கம் கொண்டது என எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.