சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சர்துல் தாக்கூரின் பெற்றோர் விபத்தில் காயம் அடைந்தனர்.
அவரது தந்தை நரேந்திர தாக்கூர் மற்றும் தாய் ஹன்சா தாக்கூர் ஆகிய இருவரும் நேற்று இரவு மகாராஷ்டிரா மாநிலம் பல்ஃகார் ((palghar)) அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் இருவரும் காயமுற்றனர்.
இதை அடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சர்துல் தாக்கூரின் பெற்றோர் இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது