இனி ஆதார் எண் கட்டாயம் இல்லை.! மத்திய அரசு அறிவிப்பு..!

சமையல் எரிவாயு இணைப்பு முதல் மதிய உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல மானியங்களுக்கு ஆதார் எண்ணை

சமையல் எரிவாயு இணைப்பு முதல் மதிய உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வந்த நிலையில் இப்போது புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதன்படி மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கும் மற்றும் பல சேவைகளுக்கும் இனிமேல் ஆதார் கட்டாயம் தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி இருக்கிறது.

unknown node

மேலும் மத்திய அரசு இப்போது தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு சில அறிவறுத்தல்களை வழங்கியுள்ளது, அதன்படி செல்போன் சிம்கார்டுக்கு வேண்டி ஆதார் அட்டையை வாடிக்கையாளர்களிடம் கட்டயாகப்படுத்தக் கூடாது என்று உத்திரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆதார் கார்டு அளிக்காவிட்டாலும் சிம் கார்டு கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொலைதொடர்பு துறை செயலாளர் அருணா சுந்தராஜன் அவர்கள் தெரிவித்தது என்னவென்றால், இனிமேல் செல்போன் சிம்கார்டு வாங்குவதற்கு ஆதார் கட்டாயமில்லை, மேலும் ஓட்டுனர் உரிமம், வாக்களர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றை கொடுத்து எளிமையா சிம்கார்டு

பெறமுடியும் என்று தெரிவித்தார்.

லோக்நிதி அறக்கட்டளை சார்பில் தொடுக்கப்பட்ட பொதுநல மனு மீது நாங்கள் பிறப்பத்த உத்தரவில், தேச பாதுகாப்பு கருதி, மொபைல் போன் எண்களை பயன்படுத்துவோரின் அடையாளம் மீண்டும் சரிபார்க்கப்பட வேண்டும் என்றுதான் தெரிவித்திருந்தோம். ஆனால் ஆதாரை கட்டாயமாக இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கவில்லை என நீதிபதிகள் கூறினர்.

ஆதார் பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, குறிப்பாக நம்முடைய ஆதார் சார்ந்த தகவல்கள் பாதுகாப்புடன் பயன்படுத்தப்பட்டு வருகிறதா என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். யுஐடிஏஐ (இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம்) தற்சமயம் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை கொண்டுவந்துள்ளது, இது கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.