பேஸ்புக் எப்8 டெவலப்பர் மாநாட்டில், பேஸ்புக்கின் மெசெஞ்சர் பயன்பாட்டின் இன்டர்பேஸை மாற்றியமைக்கும் அறிவிப்பு வெளியானது.
“நீங்கள் செய்திகளை அனுப்பும்போது, உங்களுக்கு எளிய மற்றும் வேகமாக அனுபவம் தேவை. இந்த கருத்துக்களை மையமாகக் கொண்டு, குறிப்பிட்ட மென்பொருளை முற்றிலும் மறுவடிவமைப்பு செய்ய திட்டமிட்டு உள்ளோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம்” என்று மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார்.
மெசெஞ்சர் பயன்பாட்டில் நேவிகேஷன்களுக்காக, கீழே ஐந்து டேப்ஸ் மற்றும் மேல மூன்று டேப்ஸ் உள்ளன. கூறப்படும் மருவடிவமைப்பில், கீழே மூன்று முக்கிய டேப்ஸ் இடம்பெறும். அது சாட்ஸ், காண்டாக்ஸ் மற்றும் திசைகாட்டி போன்ற லோகோவை கொண்டுள்ள ஒரு டேப் இடம்பெறும். இது பேஸ்புக்கில் உள்ள நண்பர்களை கண்டுபிடிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெசெஞ்சரின் லோகேஷன் ஷேரிங் மூலம் நண்பர்களைப் சந்திக்க முயற்சிக்கும் “தற்காலிக” பயனர்களுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
டார்க் மோட் அம்சமும் இடம்பெறுகிறது.! கீழே உள்ளது போலவே, புதிய மெசெஞ்சர் டிசைனின் மேல் பக்கத்திலும் மூன்று டேப்ஸ் இடம்பெறும் : கேமரா, வீடியோ கால் மற்றும் கம்போஸ். மேல் பக்கத்தின் இடதுபுறத்தில் பயனரின் ஐகான் மற்றும் தேடல் பட்டன் இடம்பெறும். இந்த புதிய மேம்படுத்தலில், டார்க் மோட் அம்சமும் இடம்பெறுகிறது. இது பேஸ்புக் மெசெஞ்சரில் நீண்ட நேரம் செலவழிக்கும் பயனர்களை கவரும் என்பதில் சந்தேகமே இல்லை. மேற்கூறப்பட்டுள்ள அம்சங்களை தவிர்த்து சாட் ஹெட்ஸை (Chat Heads) என்கிற ஒரு விருப்ப அம்சமாக மாற்ற உள்ளது.