ஜனக்பூர்-அயோத்தி இடையே புதிய பேருந்து சேவை : பிரதமர் நரேந்திர மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று நேபாளம் சென்றார். நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று நேபாளம் சென்றார்.

நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.

டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்ட மோடி, நேபாளத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான ஜனக்பூருக்கு நேரடியாக சென்றார்.

ஜனக்பூர் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து ஜானகி கோவிலுக்கு சென்ற மோடியை நேபாள பிரதமர் ஷர்மா ஒலி வரவேற்றார்.

பின்னர் ஒலியுடன் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்தார் மோடி.

அதன்பின்னர் ஜனக்பூரில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு நேரடி பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து உரையாற்றினார்.