சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற சந்திப்புக்குப் பின் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். தங்கள் போராட்டத்தை முடித்து வைத்தபோது அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தது போல் ஊதிய முரண்பாடுகள் தொடர்பான கோப்புகளை அவர் ஒரு நபர் ஊதியக்குழுவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் ஒரு நபர் ஊதியக் குழுவுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய அமைச்சர் உறுதியளித்ததாக கூறிய அவர்கள், ஒரு நபர் ஊதியக்குழுவுடனான சந்திப்புக்கு பிறகு ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.