கே.எம்.ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மீண்டும் பரிந்துரைக்கக் கோரித் தலைமை நீதிபதிக்குக் கொலிஜியத்தின் உறுப்பினரான நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம் எழுதியுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உத்தரக்கண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பின் பெயரைக் கொலிஜியம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை ஏற்காமல் மத்திய அரசு திருப்பி அனுப்பியது.
இந்நிலையில் கொலிஜியத்தின் தலைவரான உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைக் கொலிஜியத்தின் உறுப்பினர்களான நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப், மதன்லோக்கூர் ஆகியோர் நேரில் சந்தித்து கே.எம்.ஜோசப் பெயரை மீண்டும் பரிந்துரைக்க வலியுறுத்தினர்.
நேரில் சந்திக்கச் செல்லாத நீதிபதி செல்லமேஸ்வர், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கே.எம்.ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு மீண்டும் பரிந்துரைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.