நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் பாடல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் பாடல்-இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ காட்சிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இன்று காலையே பாடல்களை வெளியிடப் போவதாக படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் டிவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். மும்பை தாராவியை பின்புலமாகக் கொண்டு இயக்குனர் பா.ரஞ்சித் இப்படத்தை இயக்கியுள்ளார். ரஜினிகாந்த்தின் அரசியல் கட்சிக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் காலா பாடல்கள் விழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் பாடல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது .காலா படத்தின் பாடல்களை வெளியிட்டார் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ்.இதே போல் தமிழ் மட்டும் அல்லாமல் ஹிந்தி ,தெலுங்கிலும் பாடல்கள் வெளியிடப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
unknown node