ஸ்மார்ட் கம்போஸ் எனும் புதிய வசதியை ஜிமெயில் அறிமுகம்..!

விரைவில் ஸ்மார்ட் கம்போஸ் எனும் புதிய வசதியை ஜிமெயில் அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது கூகுள் நிறுவனம்.

விரைவில் ஸ்மார்ட் கம்போஸ் எனும் புதிய வசதியை ஜிமெயில் அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது கூகுள் நிறுவனம்.

unknown node

கூகுள் I/O 2018 டெவலப்பர் நிகழ்ச்சியில் ஸ்மார்ட் காம்போஸ் வசதிக்கான அறிவிப்பை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார். மேலும் இந்த புதிய ஸ்மார்ட் காம்போஸ் வசதி என்னவென்றால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் தன்மையைக் கொண்டுள்ளது.

unknown node

குறிப்பாக இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் மின்னஞ்சல்களை வேகமாக டைப் செய்ய முடியும், அதன்பின்பு ஸ்மார்ட கம்போஸ் வசதி சொற்றொடர்களை பரிந்துரைக்கும், பின்பு இவற்றை தேர்வு செய்ய கீபோர்டில் டேப் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இந்த புதிய வசதி மூலம் நேரம் மிச்சப்படுத்துவதோடு எழுத்து மற்றும் இலக்கிய பிழைகளை பெருமளவு தவிர்க்க முடியும் என கூகுள் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node

புதிய ஸ்மார்ட் காம்போஸ் அம்சம் இந்த மாதம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய அம்சம் ஜிமெயிலில் வந்தவுடன் Settings – Try the new Gmail-என்ற ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளைஸ் போன்ற வசதிகள் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் அந்த அட்டகாசமான ஸ்மார்ட் ரிப்ளைஸ் அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

unknown node

ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படும் புதிய அம்சங்களில் புகைப்படங்களை இணைப்பது பட்டன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஜிமெயில் சேவையில் எளிமையாக புகைப்படங்களை வைக்க வழிசெய்துள்ளது அந்நிறுவனம். ஜிமெயில் சேவையில் இப்போது வழங்கப்பட்டுள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், உங்கள் வரும் முக்கியாமான மின்னஞ்சல்களுக்கு உடனே குவிக் ரிமைன்டர்ஸ் எனும் வசதியின் மூலம் பதில் அனுப்ப முடியும்.

unknown node

மேலும் அவசியமற்ற நியூஸ்லெட்டர்களுக்கு எப்போது அன்-சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் என்பதை ஜிமெயில் பரிந்துரை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக தேவையில்லாத மற்றும் ஆபத்து நிரைந்த மின்னஞ்சல் வரும் போது எச்சரிக்கை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து ஜிமெயில் சேவையில் வழங்கப்பட்டு இருக்கும் கான்ஃபிடென்ஷியல் மோட் எனும் வசதி ஆனது மின்னஞ்சல்களை டவுன்லோடு, ஃபார்வேர்டு, காப்பி அல்லது பிரின்ட் செய்யவிடாமல் தடுக்கும் என கூகுள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.