இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற ஒரு பகுதியே இல்லை என, காஷ்மீர் மாணவருக்கு வெளியுறுவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதிலளித்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயிலும் காஷ்மீர் மாணவர், தமது டுவிட்டர் சுயவிவர குறிப்புகளில் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரின் பாஸ்போர்ட் சேதமடைந்ததால், புதிதாக பெறுவதற்கு சுஷ்மா சுவராஜிடம் டுவிட்டரில் உதவி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சுஷ்மா, காஷ்மீரை சேர்ந்தவர் என்றால் கண்டிப்பாக உதவி கிடைக்கும் என்று கூறினார். இதன் பின்னர், டுவிட்டரில் இருந்து இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற வார்த்தையை அந்த மாணவர் நீக்கிவிட்டார்