மீண்டும் இந்தியா : பாகிஸ்தான் போர் சூழும் அபாயம்..!

பாகிஸ்தான் 2018 - 19 ஆம் ஆண்டில்   விண்வெளி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் மதிப்பு சுமார் 400 கோடியே  70 லட்சம்

பாகிஸ்தான் 2018 – 19 ஆம் ஆண்டில்   விண்வெளி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் மதிப்பு சுமார்400 கோடியே  70 லட்சம் ரூபாய் இருக்கும்.

விண்வெளியில் சொந்த வளத்தைப் பெருக்கிக் கொள்ள பாகிஸ்தான் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டின் செயற்கைக் கோள்களை மட்டுமே பாகிஸ்தான் நம்பியுள்ளது.

இந்நிலையில், விண்வெளி  மற்றும் சூழலியல் ஆராய்ச்சிகளுக்காகவும்,இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவும் 400 கோடியே 70 லட்சம் ரூபாயை பட்ஜெடில் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், 200 கோடியே 55 லட்சம் ரூபாய் புதிய திட்டங்களுக்கும், 100 கோடியே 35 லட்சம் ரூபாய் பல்நோக்கு செயற்கைகோள் அமைக்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் விண்வெளி மையங்கள் அமைக்க 100 கோடி ரூபாயை பாகிஸ்தான் ஒதுக்கியுள்ளது.