பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைந்து வருகிறது..!

பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைந்து வருகிறது என  பன்னாட்டுப் பண நிதியம் தெரிவித்துள்ளது. ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதார நிலைமை குறித்த ஆய்வறிக்கையைப்

பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைந்து வருகிறது என  பன்னாட்டுப் பண நிதியம் தெரிவித்துள்ளது. ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதார நிலைமை குறித்த ஆய்வறிக்கையைப் பன்னாட்டுப் பண நிதியம் வெளியிட்டுள்ளது.

அதில் 2018இல் விரைவான பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2018ஆம் ஆண்டில் ஏழு புள்ளி நான்கு விழுக்காடாகவும், 2019ஆம் ஆண்டில் ஏழு புள்ளி எட்டு விழுக்காடாகவும் இருக்கும் என்றும் பன்னாட்டுப் பண நிதியம் கணித்துள்ளது.

பண மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி ஆகியவற்றின் தாக்கத்தில் இருந்து இந்தியப் பொருளாதாரம் விரைவான மீட்சியடைந்து வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது