சிரியாவில், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்..!

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 23பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 23பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் கோலன் குன்றுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறி அதற்குப் பதிலடியாக சிரியாவில் உள்ள ஈரான் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

டமாஸ்கஸ், ஹாம்ஸ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமானப் படைத்தளங்கள், ஆயுதக் கிடங்குகள், படை முகாம்கள் ஆகியவற்றின் மீது 70 ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் இவற்றில் பாதிக்கு மேற்பட்ட ஏவுகணைகளை சிரியா இடைமறித்து அழித்ததாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேலின் தாக்குதலில் சிரியாவைச் சேர்ந்த படைவீரர்கள் 5பேர், ஈரான் ஆதரவுபெற்ற படைவீரர்கள் 18பேர் என மொத்தம் 23பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது