சென்ற வருடம், தமிழகத்தில் அறிமுகப்படுதப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து,
unknown nodeஅதன் இரண்டாம் சீசனும் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.
unknown nodeரசிகர்கள் எதிர்பார்த்ததைப் போலவே, நடிகர் கமல் இந்த வருடமும் தொகுத்து வழங்க இருக்கும் வேளையில், சில தினங்களுக்கு முன் அந்த நிகழ்ச்சியின் ப்ரோமொவும் வெளியானது.
unknown nodeஇதனால், ‘பிக்பாஸ் இரண்டாம் சீசனில் கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்கள் யார்’ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
unknown nodeஇந்நிலையில் விஜய் டிவி நிர்வாகம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு
unknown nodeவிடுத்திருந்த ஒரு சில பிரபலங்களின் பெயரானது அண்மையில் வெளியானது.
unknown nodeஅந்த லிஸ்டில் நடிகை ராய் லட்சுமி பெயரும் இடம் பெற்றிருந்ததை அடுத்து, அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக புரளிகள் கிளம்ப ஆரம்பித்தது.
unknown nodeஇது குறித்து ராய் லட்சுமி, தான் கலந்துகொள்ளவில்லை என தெளிவாக தெரிவித்தும் தொடர்ந்து பிக் பாஸ் வதந்திகள் வெளியானதை தொடர்ந்து,
unknown node‘ஏன் மீண்டும் மீண்டும் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதாக வதந்தி கிளப்புகிறார்கள் என்று தெரியவில்லை.
unknown nodeபலரது விருப்படி நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், பிக்பாஸ் வீடே பற்றி எரியும்’ என கிண்டலாக ட்வீட் செய்திருந்தார்.