சுவையான லெமன் சிக்கன் கிரேவி செய்வது எப்படி ?

இன்று  நம்மில் அதிகமானோர் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சிக்கன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது இந்த சிக்கனை தான்.

சுவையான லெமன் சிக்கன் கிரேவி செய்வது எப்படி ?

இன்று  நம்மில் அதிகமானோர் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சிக்கன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது இந்த சிக்கனை தான். இன்று நாம் சுவையான லெமன் சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

சிக்கன் – 300 கிராம்

பெரிய வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 3

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

மிளகு தூள் – 1 தேக்கரண்டி

எலுமிச்சைப்பழம் – 1

லவங்கம் – 3

பட்டை – சிறய துண்டு

எண்ணெய் – 4 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லி

தயிர் – 3 தேக்கரண்டி

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில், ஒரு பாத்திரத்தில், எலும்பு இல்லா சிக்கன் துண்டுகளை, 3 தேக்கரண்டி தயிருடன் உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பில்லை, பிரிஞ்சி இலை, லவங்கம், பட்டை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

unknown node

பிறகு நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளற வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும், ஊறவைத்த சிக்கன் கலவை சேர்க்க வேண்டும். சிறு தீயில், சிக்கனை நன்றாக கிளறி வேக விட வேண்டும். அரை வேக்காட்டில், எலுமிச்சப்பழச்சாறை பிழிந்து மீண்டும் வேகவிட வேண்டும்.

இறுதியாக மிளகுத் தூள் சேர்த்து கிளறி, பிறகு கொத்தமல்லித் தூவி இறக்க வேண்டும். இப்பொது சுவையான லெமன் சிக்கன் கிரேவி தயார்.