#RRvPBKS: 20 பந்துகளில் அரைசதம்.. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஹூடா!

Punjab batsman Deepak Hooda set a new record in IPL history by hitting 1 four and 6 sixes off 20 balls in yesterday's match.

பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் தீபக் ஹூடா, நேற்றைய போட்டியில் 20 பந்துகளில் 1 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடித்து அரைசதம் விளாசி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள்.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்து. 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய ராஜஸ்தான் அணி, இறுதிவரை போராடி, 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன், 63 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து அசத்தினார்.

ஆட்டம் தொடக்கத்திலே 14 ரன்களில் மயங்க் அகர்வால் வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல் 2 சிக்ஸர், 4 பவுண்டரி என மொத்தம் 40 ரன்கள் அடித்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடா, அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 1 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடித்து அரைசதம் விளாசி அசத்தினார். மொத்தமாக 28 பந்துகள் ஆடிய அவர், 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடித்து 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத வீரர், 23 பந்திற்குள் இரண்டு முறை அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருக்கு ரசிகர்கள், இதர வீரர்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.