தீவிர விசாரனையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு..!

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலணாய்வு  முகமை அதிகாரிகள் 5 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்து முன்னணி அமைப்பின்

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலணாய்வு  முகமை அதிகாரிகள் 5 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்த சசிகுமார், கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி அதிகாரிகள், சாய் பாபா காலனியைச் சேர்ந்த சதாம், உக்கடத்தைச் சேர்ந்த அபுதாஹிர், முபாரக், சுபேர் ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனர்.

இதை அடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பல கட்ட விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று அதிகாலை 4.30 மணி முதல் சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆரிஸ், பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த அஜீஸ், செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த பிபின்ரகுமான், வெள்ளகிணறு முகமது அலி, துடியலூர் சேரன் காலனி சதாம் உசேன் ஆகிய 5 பேர்களது வீடுகளில், 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க காவல்துறை பாதுகாப்புடன், வீடுகளில் உள்ள கணினிகள், லேப்டாப்கள், செல்போன்கள் உள்ளிட்டவை சோதனை செய்யப்படுகின்றன. சோதனையில் சிக்கியுள்ள செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த பிபின்ரகுமான், சசிகுமார் கொலை வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தன்னை சிக்க வைக்க முயற்சிப்பதாக கடந்த வாரம், கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது