கோடைகாலத்தில் உடல் நோய்களை குணப்படுத்தும் சுற்றுலா

This article gives information about The summer cure is a cure for physical illness-kodaikalathil udal noikalai kunapaduthum surrulla

பொதுவாக கோடைகாலம்  என்பது நான்கு பருவகாலங்களில் வசந்த காலத்திற்கும் இலையுதிர் காலத்திற்கும் இடையே வரும் வெப்பம் மிகுந்த காலமாகும்.

இந்த காலத்தில் உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் அதிக அளவில் பாதிக்கபடுகிறது. இத்தகைய காலகட்டத்தில் நாம் வெளியே செல்வதை கூட விரும்புவதில்லை.கோடை வெப்பத்தை தணிக்க இந்த பருவநிலையில் அனைவரும்  சுற்றுலா செல்வது வழக்கம்.

குளிர்ச்சியான மலைப்பிரதேசங்கள், நீர் வீழ்ச்சிகள்,குளம்,ஆறு,ஏரி என பல வகையான இடங்களுக்கு சென்று நம்மை வெப்பத்தில் இருந்து காத்து கொள்ளலாம்.குழந்தைகளுக்கும் இந்த காலகட்டத்தில் வீட்டில் இருக்க சிரமபடுவார்கள் அவர்களை அழைத்து கொண்டு செல்லலாம்.தமிழ் நாட்டில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. கோடை வெப்பத்தை தணிக்க உதவும் சுற்றுலா தளங்கள்.

குற்றாலம்:

unknown node

குற்றாலம் தமிழ்நாட்டில் திருநெல்வெலி  மாவட்டத்தில் உள்ள அமைத்துள்ளது. குற்றாலம் ஒன்பது நீர்வீழ்ச்சிகளுக்கு பிரபலமானது. பேரருவி பிரதான அருவியாகும் . இது 60 மீ உயரத்தில் இருந்து விழுகிறது.புலி அருவி (அ) புலி நீர்வீழ்ச்சி அவ்வாறு அழைக்கப்பட காரணம் புலிகள் அடிக்கடி இந்த அருவிக்கு வருகை தந்து தங்கள் தாகத்தை தணித்துக்கொள்ளுமாம். இந்த அருவி பலவகையான பெயர்களால் அழைக்கபடுகிறது.

குற்றாலத்தில் உள்ள அருவிகள்:

அது தன்னை மேலும் எட்டு ஆற்றல் வாய்ந்த வீழ்ச்சிகளாக பிரித்துக் கொள்கிறது மற்றும் இது நாள் முழுவதும் குளிப்பதற்கு பொருத்தமானது.

குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் உள்ளன.

1)பேரருவி ( MAIN FALLS ), இது 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் அருவி, இடையில் பொங்குமாகடலால் அழுத்தம் தடைப்பட்டு, மக்கள் குளிக்க பாதுகாப்பான வகையில் குறைந்த தாக்கத்தை தருகிறது.

2) சிற்றருவி (CHITRARUVI):

சிற்றருவியில்  நீரின் அழுத்தம் குறைந்தே காணப்படும். இதன் வழியே தான் செண்பகாதேவி மற்றும் தேனருவிக்கு செல்ல முடியும்.

3) செண்பகாதேவி அருவி ( SHENBAGADEVI FALLS ):

செண்பகாதேவி அருவி செண்பக மரங்கள் வழியாக பாய்கிறது. அங்கு செண்பகாதேவி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் உள்ளது.

4)தேனருவி ( THENARUVI )

அங்கிருந்து 3 கீ.மீ தூரத்தில் தேனருவி உள்ளது. இரண்டு பெரிய கற்கள் இடையே 40 மீட்டர் உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி தொடங்குகிறது.

5) ஐந்தருவி ( AINTHARUVI )

ஐந்தருவி இவ்வனைத்திலும் மாறுபட்ட அருவியாகும். இங்கு ஐந்து தனித் தனி அருவிகள் உள்ளன.

6)பழத்தோட்டம் அருவி( PAZHATHOTTA ARUVI ):

இந்த அருவிக்கு மேலே பழத்தோட்டம் அருவி  அல்லது விஐபி அருவி இருக்கிறது.

7) பழைய குற்றாலம் அருவி ( PAZHAYA COURTALLA ARUVI )

பழைய குற்றாலம் அருவி இரண்டு பாறைகள் இடையே உள்ள பள்ளத்தாக்கில் இருந்து விழுகிறது. இடையில் இது மூடப்பட்டு பின் நீரின் போக்கை மாற்றி குளிப்பதற்கு ஏதுவாக பாறைகள் செதுக்கபட்டபின் மீண்டும் திறக்கப்பட்டது.

8)புலி அருவி ( PUZHIARUVI )

புலி அருவி செயற்கையாக உருவாக்கப்பட்ட அருவி ஆகும். இவ்வருவியின் நீர் பாசனத்திற்காக திருப்பிவிடபடுகிறது.

9) ஐந்து அருவி மேலே அரசு தோட்டக்கலை பூங்காவில் ஒரு சிறிய அருவி உள்ளது. ஆனால் அது பொது வரம்புக்குள் இல்லை.

இந்த இடங்கள்  மிக சிறந்த சுற்றுலா தளங்கள் ஆகும்.

குணப்படுத்தும் நோய்கள் :

நீர் சிகிச்சை பண்புகள் கொண்டது மற்றும் கீல்வாத மூட்டுகள், நாள்பட்ட தலைவலி மற்றும் நரம்பு கோளாறு ஆகிய நாட்பட்ட நோய்களை நீரைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது குணப்படுத்துகிறது.