ஜிஎஸ்டியின் தாக்கத்தால் திருப்பூரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனியன் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பால் கடும் நெருக்கடி ஏற்பட்டு, பனியன் ஏற்றுமதியில் 15 சதவீத சரிவு காணப்படுகிறது. முன்பு 3 சதவீதமாக இருந்த வரி இப்போது ஏழு புள்ளி 5 சதவீதமாக உயர்ந்துள்ளதால் ஏற்றுமதித் தொழிலில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வேலைவாய்ப்பைத் தேடி அஸ்ஸாம், பீகார், ஒடிசா போன்ற வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்யும் நிலையில் ஜிஎஸ்டியால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது