ஜிமெயில் புதிய அம்சங்களில் ஒன்றாக செக்யூர் மோட் இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு தகவல்களை மிகவும் பாதுகாப்பாக பரிமாற முடியும். எனினும் இந்த அம்சம் வழங்கப்படாமல் உள்ளது. விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களுக்கு பின்னர் பதில் அனுப்ப வேண்டுமெனில்புதிய ஸ்னூஸ் பட்டன் பயன்படுத்தலாம். இது குறிப்பிட்ட மின்னஞ்சலை நீங்கள் பதில் அளிக்க தயாராகும் வரை மறைத்து வைக்கும். செக் பாக்ஸ் இவற்றில் நீங்கள் தேர்வு செய்ய பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
இதனால் நீங்கள் செட் செய்த நேரத்தில் பதில் அனுப்ப முடியும். செக் பாக்ஸ்களை தேர்வு செய்து ஒரேநேரத்தில் பல மின்னஞ்சல்களை ஸ்னூஸ் செய்ய முடியும். இதற்கு மின்னஞ்சல்களை தேர்வு செய்து கடிகார ஐகானை கிளிக் செய்து ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
அட்டாச்மென்ட் முந்தைய மின்னஞ்சல்களை திறந்து அவற்றில் அட்டாச்மென்ட் இருப்பதை உறுதி செய்து அவற்றை கிளிக் செய்து பார்க்கும் காலம் கடந்து விட்டது. அட்டாச்மென்ட் க்ளிப்ஸ் வசதியை கொண்டு இனி உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களில் அட்டாச்மென்ட் இருப்பதை மிக எளிமையாக பார்க்க முடியும். அட்டாச்மென்ட் க்ளிப் உங்களுக்கு வரும் மின்னஞ்சலில் இணைக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட ஃபைல் மற்றும் அதன் பெயர் உள்ளிட்ட தகவல்களை உங்களுக்கு காண்பிக்கும். அதனை கிளிக் செய்து ஃபைலினை பிரீவியூ செய்ய முடியும்.
இதனால் உங்களுக்கு தேவைப்பட்டால் மட்டும் குறிப்பிட்ட அட்டாச்மென்ட் ஃபைலை டவுன்லோடு செய்யவோ அல்லது, கூகுள் டிரைவிலோ சேர்க்கலாம். புதிய ஜிமெயிலை செட்டப் செய்யும் போது டீஃபால்ட் வியூ ஆப்ஷனை தேர்வு செய்வோருக்கு மட்டுமே இந்த அட்டாச்மென்ட் க்ளிப்ஸ் ஆப்ஷன் தெரியும்.
புதிய ஜிமெயிலின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக கொலேப்ஸ் செய்யக்கூடிய சைடு பேனல் இருக்கிறது. வலது புறத்தில் உள்ள இந்த ஆப்ஷன் இன்பாக்ஸ்-இல் உள்ள மற்ற செயலிகளை அவற்றை தனியே திறக்காமலே பயன்படுத்த முடியும். கூகுள் காலெண்டர், கீப் மற்றும் டாஸ்க் ஆப்ஷன்களும் சைடுபாரில் இணைக்கப்பட்டிருக்கிறது.
இவற்றை வழக்கமான முறையில் சரிபார்க்க முடியும். மின்னஞ்சல்களை இன்பாக்ஸ்-இல் இருந்து நேரடியாக டாஸ்க் பகுதிக்கு டிராக் செய்வது இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது. டிரெல்லோ மற்றும் ஆசனா இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட டாஸ்க் நிறைவுறுவதற்கான தேதியை செட் செய்து, அதனை முடித்ததும் அவற்றை மார்க் செய்ய முடியும்.