விவசாயிகளுக்கு வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை..!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலுள்ள யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பதால் உயர் அழுத்த மின்சார வேலிகளை அமைக்கக் கூடாது என்று விவசாயிகளுக்கு வனத்துறை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலுள்ள யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பதால் உயர் அழுத்த மின்சார வேலிகளை அமைக்கக் கூடாது என்று விவசாயிகளுக்கு வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், புலி, யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் வனத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள விவசாயப் பயிர்களை நாசம் செய்கின்றன.

இதைத் தடுப்பதற்கு, லேசாக ஷாக் அடிக்கக்கூடிய சூரியசக்தி மின்சாரம் மற்றும் கன்வெர்ட்டரை பயன்படுத்தி மின்வேலி அமைக்க விவசாயிகளுக்கு அனுமதி உண்டு. ஆனால் விவசாயிகள் உயர் அழுத்த மின்சார வேலிகளை அமைப்பதால் யானைகள் சிக்கி உயிரிழக்கின்றன. கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு யானைகள் உயிரிழந்தன. இதனால் விவசாயிகள் இந்த உயர் மின் அழுத்த வேலிகளை அமைப்பதைக் கைவிட வேண்டுமென்று வனத்துறையினர் கூறியுள்ளனர்