திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்னுப்பிரியா தற்கொலை வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ அறிவித்துள்ள நிலையில், நீதி கிடைக்கும் வரை விடப்போவதில்லை என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா, கடந்த 2015ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.விஷ்ணுபிரியாவின் மரணம் தொடர்பாக அவரது தந்தையின் வேண்டுகோளை ஏற்று நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது- அதன்படி விசாரணை மேற்கொண்டு வந்த சி.பி.ஐ விஷ்ணுபிரியாவின் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்றும், வழக்கைக் முடித்து கொள்வதாக கோவை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில், கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரது தந்தை ரவி ஆஜராகி வழக்கை முடித்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து இவ்வழக்கின் விசாரனையை வருகின்ற 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது