இராணுவ அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என ஆசை : தீவிரவாதி அஜஸ் அகமது கோஜ்ரி

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த 10 பேர்  வட காஷ்மீர் பகுதியில்  கைது செய்யப்பட்டனர். பராமுல்லா பயங்கரவாதத் தீவிரவாத  தாக்குதலில் ஈடுபட்டதாக

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த 10 பேர்  வட காஷ்மீர் பகுதியில்  கைது செய்யப்பட்டனர். பராமுல்லா பயங்கரவாதத் தீவிரவாத  தாக்குதலில் ஈடுபட்டதாக  கூறப்பட்ட 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவன்   ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளான், அது மற்ற தீவிரவாதிகளை ‘வன்முறை பாதையைத் தவிர்ப்பதற்கு’ வலியுறுத்தி உள்ளது. தனது நண்பர்கள் சுஹைப் அகுன்,   மொஹ்சின் முஸ்தாக் பட் மற்றும் நாசிர் அமீன் டிராசி ஆகியோர் வீடுக்குத் திரும்ப கேட்டு கொண்டு உள்ளான்.

அந்த வீடியோவில் தீவிரவாதி தன்னை அஜஸ் அகமது கோஜ்ரி என்று அடையாளம் காட்டுகிறார். அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது;-

“நான் அனைத்து தீவிரவாதிகளுக்கும்  வேண்டுகோள் விடுக்கிறேன், தவறான பாதையில் இருப்பவர்கள் மற்றும் தங்கள் வீடுகளை விட்டு விட்டு  காடுகளில் வசித்து வருகின்றனர், அவர்கள் வீடு திரும்ப வேண்டும் தங்கள் பெற்றோரிடம் சேர வேண்டும். நான் நாசீர் அமீன் இட்சம் சொல்கிறேன் அவரது தாயார் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளார் அவர் திரும்பிச் செல்ல வேண்டும்.

அவருடைய வாழ்க்கையில் புதிய அர்த்தத்தை புரிந்துகொண்டு, அவர் மேலும் தொடர்கிறார்.

என்னை கைது செய்தபோது இராணுவம் என்னை கொன்றிருக்கலாம், ஆனால் அவர்கள் அதற்கு பதிலாக எனது உயிரை காப்பாற்றினார்கள்.

நான்  கைது செய்யப்படுவதற்கு முந்தைய நாளில், இராணுவம் கொடூரங்களை நடத்தி வருவதாக பாகிஸ்தான் என்னிடம் கூறினார்கள். ஆனால் அது உண்மையல்ல. இது பாகிஸ்தானால் ஏற்படுத்தப்பட்ட  ஒரு சதி. “

இந்திய இராணுவம் பற்றி பாகிஸ்தானில் எங்கள் தலைவர்களால் நாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டோம், அது உண்மையல்ல. நீங்கள் இராணுவ அதிகாரிகளை சந்திக்க வேண்டும். சதி செய்து பாகிஸ்தானியர்கள் எங்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள், என கூறி உள்ளான்.