இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி , வெற்றிகளை விட தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும் என தெரிவித்தார். சிறு வயதில் கிரிக்கெட் மற்றும் பேட்மிண்டனை அதிகமாக விளையாடியதாக கூறிய கோலி, தற்போது தொழில்ரீதியான கிரிக்கெட் வீரராக தாம் உருவாகி இருப்பதை சிறு வயதில் நினைத்துக் கூட பார்த்ததில்லை என்றும் குறிப்பிட்டார்.
தம் வாழ்வின் தோல்வி மிகுந்த அத்தியாயங்கள் மூலம் தான் சிறந்த வீரராக உருவாகி இருப்பதாக தெரிவித்த கோலி, வெற்றிகள் மூலம் எதையும் கற்றுக் கொள்ள முடியாது என கூறினார்.