தொட்டா கணபதி ஆலயத்தில் சாமி தரிசனம் மேற்கொண்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
பெங்களூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புகழ்பெற்ற தொட்டா கணபதி ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பெங்களூரில் உள்ள பசவனக்குடி பகுதியில் வேனில் பயணித்து, பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். முன்னதாக, பசவனக்குடியில் உள்ள புகழ்பெற்ற தொட்டா கணபதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து ராகுல் காந்தி வழிபட்டார்