தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் பொதுமக்களிடம் 300 கோடி ரூபாய் மோசடி செய்த சித்ரா சிட்ஃபண்ட் நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஓராண்டுக்குப் பின் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த ஆண்டு நடந்த மோசடிக்குப் பின்னர் தலைமறைவாக இருந்த நிறுவன உரிமையாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி விஜய நிர்மலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதை அடுத்து சித்ரா சிட்ஃபண்ட் அலுவலகத்தில் கடந்த ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆவணங்கள் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அஞ்சிய மக்கள் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. அருள் தலைமையில் ஏராளமான போலீசார், சித்ரா சிட்பண்ட் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது