வனப்பகுதியில் கருப்பு நிற குட்டி கரடியை கண்டெடுத்தனர் சீனா மக்கள்..!

சீனாவில் அழிந்துவரும் இனத்தை சேர்ந்த கரடியை, நாய்க்குட்டி என நினைத்து செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளனர். தென்மேற்கு சீனாவின் யூனன் ( yunnan ) மாநிலத்தில்

சீனாவில் அழிந்துவரும் இனத்தை சேர்ந்த கரடியை, நாய்க்குட்டி என நினைத்து செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளனர். தென்மேற்கு சீனாவின் யூனன் ( yunnan ) மாநிலத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தார், வனப்பகுதியில் கருப்பு நிற குட்டி கரடியை கண்டெடுத்தனர்.

கொழு கொழு வென இருந்த அதை, நாய்க்குட்டி என்று கருதி பல மாதங்கள் வளர்த்து வந்தனர். முழு வளர்ச்சி பெற்ற பிறகு தான், செல்லமாக கொஞ்சி வளர்த்தது, கரடி என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அழிந்துவரும் இனத்தை சேர்ந்த அந்த கரடி, பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது