செல்போன் பேசிக்கொண்டே பேருந்ந்தை ஓட்டிய ஓட்டுனருக்கு நூதன முறை தண்டனை..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செல்போன் பேசிக்கொண்டே தனியார் பேருந்ந்தை ஓட்டிச்சென்ற ஓட்டுனருக்கு போக்குவரத்தை சரி செய்யும் தண்டனை வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செல்போன் பேசிக்கொண்டே தனியார் பேருந்ந்தை ஓட்டிச்சென்ற ஓட்டுனருக்கு போக்குவரத்தை சரி செய்யும் தண்டனை வழங்கப்பட்டது.

இவர் தனியார் பேருந்து ஓட்டுனர் முருகானந்தம்..!

ஏதோ சமூக பொறுப்புணர்வுடன் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று எண்ணி விடாதீர்கள்..! இவர் பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் தனியார் பேருந்தை ஓட்டி சென்ற போது செல்போன் பேசியபடியே பேருந்தை இயக்கினார்.

பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் அதனை படம்பிடித்து பொள்ளாச்சி காவல் துறை துணை கண்கானிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி பேருந்து இயக்கிய ஒட்டுநர் முருகானந்ததை பிடித்து விசாரனை நடத்தினர். வீடியோவுடன் சிக்கியதால் அவர் தவறை ஒப்புக்கொண்டார்