காவிரி மேலாண்மை வாரியம் கோரி உண்ணாவிரதம்..!

காவிரி மேலாண்மை வாரியம் கோரி உண்ணாவிரதம்.தஞ்சையில் 300க்கும் மேற்பட்ட தையற் கலைஞர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப்

காவிரி மேலாண்மை வாரியம் கோரி உண்ணாவிரதம்.தஞ்சையில் 300க்கும் மேற்பட்ட தையற் கலைஞர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி,  தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பனகல் கட்டிடம் முன்பு, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த  300 க்கும் மேற்பட்ட தையற்க் கலைஞர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறினால் தொடர்ந்து போராட தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.