விமான நிலையத்தில் தலைப்பாகையை கழற்றுமாறு கூறியது தொடர்பாக கனடா அமைச்சர் நவ்தீப் பெய்ன்ஸை இடம் அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளது.
கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியரான நவ்தீப் பெய்ன்ஸ் அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார்.
அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த நவ்தீப், அங்குள்ள டெட்ராய்ட் மெட்ரோ விமான நிலையத்திற்கு சென்ற போது, தலைப்பாகையை கழற்றுமாறு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அவர் ஒருநாட்டின் அமைச்சர் என்று தெரிந்ததும் சோதனையிடாமல் அதிகாரிகள் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்காக கனடா அரசிடம் அமெரிக்க அதிகாரிகள் மன்னிப்பு கோரியுள்ளனர்.
எனினும் உளவியல் ரீதியாக இந்த சோதனை தம்மை பாதித்துள்ளதாக நவ்தீப் பெய்ன்ஸ் கூறியுள்ளார்.