நாகை மாவட்டம் கீழ்வேளூரில் மின்சாரம் தாக்கி சகோதரர்கள் இறப்பு..!

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் மின்சாரம் தாக்கி  ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் மின்சாரம் தாக்கி  ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீழ்வேளூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் ராமலிங்கத்தின் மகன்கள் கணேசனும் ராஜாவும் டிவி கேபிள் ஒயரை சரி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்ட கணேசன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

விசாரணைக்காக வந்த காவல்துறையினரிடம்  கணேசனை மின்சாரம் தாக்கியது குறித்து  விளக்கமளிக்கும்போது மின்சாரம் தாக்கியதில் அவரது தம்பி ராஜாவும் உயிரிழந்தார்.

இருவருக்கும் திருமணமாகி 9 மாதங்களே ஆன நிலையில், இந்த சோக சம்பவம்  நடந்துள்ளது. இது தொடர்பாக கீழ்வேளூர் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்