சிங்கள ராணுவம் வெளியேற நடவடிக்கை... வைகோ வலியுறுத்தல்

தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து சிங்கள ராணுவம் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஜெனீவா கூட்டத்தில் வைகோ வேண்டுகோள் விடுத்து பேசியுள்ளார்.

unknown node

ஜெனீவா: சிங்கள ராணுவம் வெளியேற நடவடிக்கை எடுக்கணும்… எடுக்கணும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து சிங்கள ராணுவம் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஜெனீவா கூட்டத்தில் வைகோ வேண்டுகோள் விடுத்து பேசியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், உலகமெங்கும் உள்ள தேசிய இனங்கள் பொதுவாக்கெடுப்பு நடத்தி சுதந்திர நாடுகள் ஆகிவிட்டன.தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து சிங்கள ராணுவம் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா மேற்பார்வையில் சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும். இவ்வாறு வேண்டுகோள் விடுத்து பேசினார்.

இந்த மாநாட்டில் இவர் பேசக்கூடாது என்பதற்காக சிங்களவர்களால் மிரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.