தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியவை, ‘தமிழக அரசு எம்ஜியாரின் நூற்றாண்டு விழாவின் ஏற்பாடுகளை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களின் பிரச்சனைகளை கவனிக்க வேண்டும், மேலும் டெங்கு, கந்துவட்டி போன்ற பிரச்சனைகளை பற்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் தெரிவித்தார்.
unknown nodeமேலும் நீதிமன்ற உத்தரவான பேனர் தடை பற்றி கேட்டதற்கு ‘நீதிமன்ற தீர்ப்பை நாம் அனைவரும் மதிக்கத்தான் வேண்டும் எனவும், மேலும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இதனை உடனடியாக நடைமுறை படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே, இருந்தாலும் இந்த தீர்ப்பை நாம் எற்றுகொள்ளதான் செய்யவேண்டும் ‘ என அவர் பேட்டியில் தெரிவித்தார்.