அனிதா தற்கொலை பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் பேசியது இதுதான்

#Kamal Haasan#Anitha Suicide#Neet Exam advertisement மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போனதால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது தமிழ்நாட்டில் பெரிய

unknown node

#Kamal Haasan#Anitha Suicide#Neet Exam

advertisement

மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போனதால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது தமிழ்நாட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது பற்றி பேசியதாவது..

“நாட்டில் புரட்சி துவங்கியிருப்பதாக நினைக்கிறேன். நீட் பற்றி தான் பேசுகிறேன். குற்றம் யார் மீது என்பதை பேச பலர் இருக்கிறார்கள். நாம் – மக்களும், மாணவர்களும் தீர்வை நோக்கி தான் செல்லவேண்டும். பலமுறை நம் இனம் மீது துரோகம் இழைக்கப்பட்டபோது என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைந்துகொண்டிருந்தோம், இனிமேல் அப்படி செய்ய கூடாது.. கையை கோர்த்துக்கொள்ளவேண்டும். இந்த பிரச்சனைக்கு எந்த தீர்வும் என்னிடம் இல்லை, இருந்தால் சொல்லியிருப்பேன்.”

”பெரியவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என மாணவர்கள் விட்டுவிடவேண்டும், நாளைய பெரியவர்களே நீங்கள் தான்.”

”அடுத்த வருடத்திற்குள் ஒரு தீர்வை கண்டுபிடித்தாகவேண்டும், அதற்கான எல்லா முயற்சியும் செய்யவேண்டும். இது சுதந்திர போராட்டம்.”

”நான் அட்லஸ் இல்லை உலகத்தை தாங்கி பிடிக்க, ஆனால் உலகம் என்னை தாங்கி பிடிக்கும் என நம்புகிறேன்” என கூறினார்.