டாக்டராக வேண்டும் என்ற அரியலூர் மாணவி அனிதாவின் கனவை, மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து தகர்த்துவிட்டன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.“மாணவி அனிதா தற்கொலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசைக் கண்டித்து சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நீட் தேர்வுக்கு எதிராக, தமிழகத்திற்கு விலக்குக் கோரி மாணவி அனிதா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு விசாரணையின்போது நிர்மலா சீத்தாராமன் வாக்குறுதிக்கு மாறாக, தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார். மாநில அரசும் விலக்கு பெற்றுத்தரவில்லை.மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து அனிதாவின் கனவைத் தகர்த்துவிட்டன. இந்தத் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ராமகிருஷ்ணன்கூறினார்.இப்போராட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாக்கியம் (தென்சென்னை), எல்.சுந்தரராஜன் (வடசென்னை) உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மத்திய, மாநில அரசுகள் அனிதாவின் கனவைத் தகர்த்துவிட்டன: ஜி.ராமகிருஷ்ணன்
டாக்டராக வேண்டும் என்ற அரியலூர் மாணவி அனிதாவின் கனவை, மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து தகர்த்துவிட்டன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்
unknown node