இலங்கையை வொயிட் வாஷ் செய்த இந்தியா!!!தொடரையும் கைப்பற்றியது!!!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன்மூலம் இலங்கையை

unknown node

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன்மூலம் இலங்கையை 5-0 என்ற கணக்கில் வொயிட் வாஷ் செய்துள்ளது.

5-வது ஒருநாள் போட்டி நேற்று  நடைபெற்றது. முதலில் விளையாடிய இலங்கை அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்கள் எடுத்தது. இந்திய அணி வெல்ல 239 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும் ரஹானேவும் களமிறங்கினர். ஆனால் இருவரும் நிலைக்கவில்லை. அடுத்தடுத்து அவுட் ஆகிவிட்டனர்.

பின்னர் இணைந்த கோஹ்லி- மணீஷ் பாண்டே ஜோடி நிதானமாக விளையாடியது. மணீஷ் பாண்டே 36 ரன்களில் அவுட் ஆகினார்.

இதையடுத்து கோஹ்லியுடன் கை கோர்த்தார் ஜாதவ். இந்த ஜோடி ரன்குவிப்பில் விறுவிறுப்பை காட்டியது. இந்த ஜோடியை இலங்கை வீரர்களால் பிரிக்க முடியவில்லை.

unknown node

ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி 30-வது சதத்தையும் எட்டினார். 63 ரன்கள் எடுத்த நிலையில் ஜாதவ் அவுட் ஆனார். பின்னர் கோஹ்லியுடன் டோணி இணைந்தார். கோஹ்லி 110 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி வென்றது.

இந்த வெற்றி மூலம் 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியே வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளிடையே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் கொழும்பில் நடைபெறுகிறது.