unknown node
செய்யூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.டி.அரசு வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் முனுசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 2016 சட்டமன்ற தேர்தலில் செய்யூர் தொகுதியில் 360 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆர்.டி.அரசு வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ஆர்.டி.அரசு பெற்ற வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்திருந்தார்.