தினகரனின் ஆதரவாளரான தளவாய் சுந்தரத்தை அப்பதவியிலிருந்து மாற்றிவிட்டு கே.பி.முனுசாமியை அப்பதவிக்கு நியமிக்க முதல்வர் உத்தேசித்திருந்தார். இந்நிலையில் அதிமுக இணைப்பின் போது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கான அமைச்சர் பதவி குறித்து பேசியதை விட தனது மேலிட பிரதிநிதி பதவி குறித்துதான் அவர் அதிகம் பேசியதாக தெரிகிறது.
இந்த நிலையில் தளவாய் சுந்தரம் அதிமுக பொதுக் குழு கூட்டத்திலும் பங்கேற்றார். முதல்வருக்கு ஆதரவாக தளவாய் சுந்தரம் செயல்படுகிறார் என்று சந்தேகத்தை இதன் மூலம் தீர்த்து கொண்ட தினகரன், அதிமுக அமைப்பு செயலாளராக உள்ள தளவாய் சுந்தரத்தின் பதவியை பறித்து உத்தரவிட்டுள்ளார்.