டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்தனர்.ஆதரவை திரும்பப்பெறுவது குறித்து நேரில் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நோட்டிஸ் அனுப்பினார்.
கடந்த 5 நாட்களாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்க தமிழ்ச்செல்வன், சபாநாயகரை சந்திக்கும் திட்டமில்லை என்று கூறினார்.
குடியரசுத் தலைவர் அழைப்புக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார். இந்த ஆட்சியை கலைக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம் என்றும் தினகரனின் வழியில் நாங்கள் நிற்போம் எனவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.