unknown node
இரோம் ஷர்மிளாவும் அவர் கணவரும் நேற்று மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்று ஆயுத படை சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை அகற்ற வலியுறுத்த வேண்டும் என்று கூறினர். கட்சி ஏற்கனவே அந்த நிலைபாட்டை எடுத்திருக்கிறது, திரிபுரா இடது முன்னணி அரசு சட்டத்தை ரத்து செய்து விட்டது என்று அவர்களும் தெரிவித்திருகிறர்கள். மேலும் அவரது போராட்டம்,சமூக பங்களிப்பை பாராட்டினார்கள். இந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம்,மாதர் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் வாசுகி ஆகியோர் பங்கேற்றனர்.