#BigNews:அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் இறுதியானது – எல்.முருகன் 

BJP will contest 20 constituencies in AIADMK alliance - L. Murugan

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக போட்டியிடும் தொகுதிகள் இறுதியானது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் .

அதிமுக தலைமையகத்தில் வைத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உடன் பாஜக நிர்வாகிகள் பாஜக வேட்பளர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில் பாஜக விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது 20 இடங்களுக்கான தொகுதிகள் இறுதியானதாக பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வெளியே வந்த எல்.முருகன் தெரிவித்துவிட்டு சென்றார்.

இந்த பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்,கிஷன் ரெட்டி ,எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.சுமார் 2 மணி நேரம் மேல் நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக முதல் கட்சியாக தனக்கான தொகுதிகளை உறுதி செய்துள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.