பாஜக எம்எல்ஏ.வின் மகன் தன்னை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டிய பெண்..!

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ.வின் மகன், தன்னை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டி, பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில்

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ.வின் மகன், தன்னை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டி, பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோ-வில் ((Unnao)) சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யப்படாததால், பாதிக்கப்பட்ட பெண் உத்தரப்பிரதேச முதலமைச்சர் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார்.

இதன் பிறகே, வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மற்றொரு பாஜக எம்எல்ஏ-வின் மகன் தன்னை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட தமக்கு நீதி கேட்டு, அவர் ஷாஜகான்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதனிடையே, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.