புத்திசாலியுடன் பழக வேண்டும். அதி புத்தி சாலியுடன் பழக கூடாது : நடிகர் ரஜினிகாந்த்..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் உருவாகி உள்ளது.  இதனை அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்து இருக்கிறார். பா.ரஞ்சித் டைரக்டு செய்து இருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் உருவாகி உள்ளது.  இதனை அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்து இருக்கிறார். பா.ரஞ்சித் டைரக்டு செய்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். கதாநாயகியாக இந்தி நடிகை ஹீமா குரோசி நடித்துள்ளார். இந்தி நடிகர் நானா படேகர், சமுத்திரக்கனி, ரவி காலே, சாயாஜி ஷின்டே, ஈஸ்வரிராவ், அஞ்சலி பட்டேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

காலா படத்தின் இசை வெளியீட்டு விழா  நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:- “  புத்திசாலியுடன் பழக வேண்டும். அதி புத்தி சாலியுடன் பழக கூடாது

கருணாநிதியின் குரலை கேட்க ஆவலாக உள்ள கோடானு கோடி பேரில் நானும் ஒருவன்.  என்னுடைய வாழ்க்கையில் ஒரே கனவு நதிகள் இணைப்பு.  தண்ணீர் பிரச்சினை என்றால் என்னை அறியாமல் ஆர்வம் வந்து விடுகிறது. என் வாழ்க்கையின் கனவும் தென்னிந்திய நதிகளை இணைப்பதே.

நல்லவனாக இருக்க வேண்டும். ரொம்ப நல்லவனாக இருக்க கூடாது. அப்படி இருந்தால் கோழை என்பார்கள். நான் முடிந்துவிட்டேன் என 40 ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள்” இவ்வாறு அவர் பேசி வருகிறார்.