ஓடும் ரயிலில் குழந்தையை பெற்ற சீனப்பெண்..!

ஓடும் ரயிலில் கர்ப்பிணி ஒருவர் அழகிய குழந்தையை பெற்றெடுத்தார் சீனாவில்.

ஓடும் ரயிலில் கர்ப்பிணி ஒருவர் அழகிய குழந்தையை பெற்றெடுத்தார் சீனாவில்.

ஜியோங் ((Xiong)) பகுதியில் அதிவேக ரயிலில் கர்ப்பிணி ஒருவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து ரயில் பையாங்தியன் ((Baiyangdian)) ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து அருகில் இருந்த பெண்கள் உதவி செய்ததையடுத்து அந்தப் பெண் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இதற்குள் ஆம்புலன்ஸ் வந்து விடவே தாயும், சேயும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.