புதிய பிரதமர் மகாதிர் முகமது மலேசியாவில், சிறையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிமுக்கு மன்னர் விரைவில் பொதுமன்னிப்பு வழங்க உள்ளதாக, அந்நாட்டின் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ள மகாதிர் முகமது, கோலாலம்பூரில் இன்று கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், இந்த ஆலோசனையில் முக்கியமான 10 துறைகளுடன், சிறிய அமைச்சரவை அமைக்க முடிவானதாக கூறினார். அமைச்சர்கள் குறித்த விவரங்கள் நாளை அறிவிப்பதாக அவர் தெரிவித்தார்.
தற்போது சிறையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிமுக்கு, விரைவில் பொதுமன்னிப்பு அளிக்க இருப்பதாகக் மலேசிய மன்னர் கூறியதாக மகாதிர் முகமது குறிப்பிட்டார்.